2 தக்காளிக்காக கணவனிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி..!
மத்திய பிரதேசத்தில் சமைக்கும் போது இரண்டு தக்காளிகளை கூடுதலாக சேர்த்து சமைத்த கணவனிடம் சண்டை இட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி மீண்டும் வந்து சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு நபர் சில நாட்களுக்கு முன்பு சமைக்கும் பொழுது மனைவியிடம் தெரிவிக்காமல் இரண்டு தக்காளியை கூடுதலாக சேர்த்து சமைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி தன்னிடம் கேட்காமல் ஏன் செய்தீர்கள் என்று கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மனைவியை தேடி கண்டுபிடித்து அவரிடம் சேர்த்து வைத்தனர்.






