--- --:--:-- --

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் முதல்வர் அறிவிப்பு..!

5

மேயர் கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் இந்த மாத முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மற்ற உறுப்பினர்கள் இந்த மாதம் முதல் மாதாந்திர மதிப்பூதியம் பெற உள்ளனர்.

 

இதன்படி மாநகராட்சி மேயர்களுக்கு மாதம்தோறும் 30 ஆயிரம் ரூபாய் துணை நேயர்களுக்கு 15,000 மாநகராட்சி உறுப்பினர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது.

 

நகராட்சி தலைவர்களுக்கு 15,000, துணை தலைவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய், நகர மன்ற உறுப்பினர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பூதியம் கிடைக்கும். இதைப் போல பேரூராட்சி தலைவர்களுக்கு 10,000 ரூபாய் துணை தலைவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2.500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon