வீட்டின் குடிநீர் தேவைக்காக குழி தோண்டிய சிறுவன், சிறுமி..!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்காடு பகுதியை சேர்ந்த சிறுமியும், சிறுவனும் தங்களது வீட்டிற்க்காக குடும்பத்தினர் உதவியுடன் 34 அடி ஆழ கிணறு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
கட்டுமான தொழிலாளியான பாபுராஜ் என்பவரது வீட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவரின் குழந்தைகளான சிவன்யாவும் சிவசித்தும் தங்கள் முயற்சியில் கிணற்றை உருவாக்க முடிவு செய்தனர். அதற்கு பாபுராஜூம் அவரது மனைவியும் ஒத்துழைக்க உறுதி அளித்ததையடுத்து கிணற்றைத் தோண்டும் பணி தொடங்கியது.






