தாயும், சிறுமியும் வந்த வாகனம் மீது மோதிய காவல்துறை வாகனம்..!
திருப்பூரில் ஸ்கூட்டரின் பின்பக்கம் காவல்துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழந்தார். ராஜேஸ்வரி என்ற பெண் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.
நல்லூர் காவல் நிலையம் அருகே காவல்துறை வாகனம் ஒன்று ஸ்கூட்டரின் பின்பக்கம் மோதியதில் நிலை தடுமாறி சிறுமி கீழே விழுந்தார். அவர் மீது காவல் வாகனம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த ஊர்க்காவல் படை வீரர் என்பவரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட அந்த பகுதி மக்கள் முயன்றனர். அங்கிருந்த போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து ஸ்கூட்டரில் முன்பக்கம் வைத்திருந்த சிறுமியின் புத்தகப்பை திடீரென கீழே சரிந்ததாகவும் அதனை ராஜேஸ்வரி ஒற்றை கையால் சரி செய்ய முயன்ற பொழுது ஏற்பட்ட தடுமாற்றத்தில் விபத்து நேர்ந்ததாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளித்தனர்.






