--- --:--:-- --

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவுக்கு பின்னடைவு..!

9

தெலுங்கானாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் இணைந்ததில் சங்கரசேகர ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முதலமைச்சரின் சந்திரசேகரராவ் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.

 

அண்மையில் பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகள ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத போதும் மாற்று சக்தியாக தனது கட்சியை வெற்றி பெற செய்யும் நோக்கில் அவர் உள்ளார்.

 

இந்த நிலையில் சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த 12 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்களில் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

நடப்பாண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளதால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon