--- --:--:-- --

இங்கிலாந்தில் படிக்க சென்ற கோவை மாணவன்.. கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி..!

10

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் ஜீவன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படிப்பை பயில கடந்தாண்டு சென்றுள்ளான்.

 

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஜீவன் இங்கிலாந்து நாட்டின் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்த தகவல் ஜீவன் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

மேலும் ஜீவன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவலை லண்டன் காவல்துறை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் குறித்த தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை தற்பொழுது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜீவனின் மரணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon