மாவட்ட ஆட்சியர் அருகில் அடுத்தடுத்து சுருண்டு விழுந்த பெண்கள்..!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மனு கொடுக்க சென்ற இரண்டு பெண்கள் அடுத்தடுத்த மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் மனுநாள் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். இதில் மனு கொடுக்க சென்ற லில்லி என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் மனு கொண்டு வந்திருந்த நிலையில் நளினி என்ற பெண்ணும் மயங்கி விழுந்தார். அவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அடுத்தடுத்து இரண்டு பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





