--- --:--:-- --

கேரளாவில் பரிசல் கவிழ்ந்து ஒருவர் பலி..!

8

கேரள மாநிலம் வயநாட்டில் பரிசல் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். இருவர் நீந்தி உயிர்த் தப்பினர். வய நாட்டில் உள்ள காரபுலானையில் அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் பரிசலில் சென்று வந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பரிசல் கவிழ்ந்து மூன்று பேரும் நீரில் மூழ்கினர்.

 

இதில் இருவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் ஆம்பல் செடிகளுக்கு இடையே சிக்கி கிரீஸ் என்பவர் உயிரிழந்தார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 

Right Menu Icon