--- --:--:-- --

மதுரையில் 100க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் அதிரடியாக அகற்றம்..!

4

கோவை மாவட்டத்தில் விளம்பர பேனர் விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அதன் எதிர்வினையாக மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

 

கோவை மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி விளம்ப பேனரால் ஏற்பட்ட விபத்தில் மூன்று கோடி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

 

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேனர்களை அகற்றினார். ஐம்பதுக்கு மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

 

இது குறித்து காவல்துறையினர் கேட்டபோது அனுமதியை மீறி பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon