சுற்றுலா சென்ற பள்ளி குழந்தைகளை சரமாரியாக குத்திய சைக்கோ கொடூரன்..!
பிரான்சில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய சைக்கோவை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.
சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட பள்ளி குழந்தைகள் பூங்காவில் விளையாடிய பொழுது அவர்களை ஒருவன் கத்தியால் தாக்க தொடங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவன் சிரியாவில் இருந்து சட்டவிரோதமாக பிரான்சுக்கு வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த ஆறு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விரைவில் குணமடைய பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. அந்த நபர் எதற்காக தாக்கினார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






