பாதுகாப்பு உபகரணங்களே இல்லை – தூய்மை பணியாளர்களுக்கு நிகழ்ந்த கொடுமை..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்று கால்வாய்களில் தூர்வாரும் அவல நிலை நீடித்து வருகிறது. 18 வார்டுகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு கை கவசம், முகக் கவசம், தலை கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததால் சாக்கடை மற்றும் கால்வாயில் இருந்து வரும் கடுமையான துர்நாற்றத்தை தாங்கிக்கொண்டு சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து உடனடியாக மாவட்ட பேரூராட்சிகள் இயக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.






