தாய், மகன் உட்பட மூன்று பேர் உயிருடன் எரிப்பு..!
மணிப்பூரில் தாய், எட்டு வயது மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. கடந்த நான்காம் தேதி இரு தரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் எட்டு வயது சிறுவன் உடலில் குண்டு பாய்ந்தது.
அந்த சிறுவனை அவனது தாயின் உறவினர் ஒருவரும் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்பொழுது ஒரு இடத்தில் 2000 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
சிறுவனின் தாய் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் வன்முறை கும்பல் ஆம்புலன்ஸ்க்குள் வைத்து கொடூரமான முறையில் எரித்ததால் சிறுவன் அவனது தாய் மற்றும் உறவினர் ஒருவர் என மூன்று பேர் வன்முறையாளர்களால் கொல்லப்பட்டனர்.





