ஆழ்துளை கிணற்றில் 30 அடி ஆழத்தில் சிக்கியுள்ள 3 வயது பெண் குழந்தை..!
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. செவ்வூர் மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த திருஷ்டி என்ற மூன்று வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சென்று ஆய்வு செய்ததில் 300 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் குழந்தை 30 அடியில் சிக்கியது தெரிய வந்தது.
இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆழ்துளை கிணற்றிலிருந்து 5 மீட்டர் தொலைவில் மற்றொரு குழியை தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





