திருமண நிச்சயதார்த்தத்தில் ஒரு டம்ளர் பாயசத்திற்காக நடந்த சண்டை..!
மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயதார்த்த விழாவில் விருந்தில் பாயாசம் கேட்டு ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் தெற்குரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
விழாவில் தடபுடலாக விருந்து வைத்த நிலையில் இரு வீட்டாரும் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது பாயாசத்தில் லைட்டாக டேஸ்ட் குறைந்துள்ளது. அங்கு தான் ஆரம்பித்துள்ளது பிரச்சனை. பாயாசம் சரியில்லை என பெண் வீட்டார் தகாத வார்த்தையால் மாப்பிள்ளை வீட்டாரை கேட்டுள்ளனர்.
என்னடா சொன்னேன்னு மாப்பிள்ளை வீட்டாருக்கு கோபம் பிச்சுகிட்டு வர குண்டாவில் சுடச்சுட இருந்த சாம்பாரை எடுத்து பெண் வீட்டார் மீது ஊற்றியுள்ளனர். இதில் மங்கலமான நிகழ்ச்சி அலங்கோலமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
இரு வீட்டாரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிய மண்டபத்திற்குள் நடந்த பிரச்சனை வீதிக்கு வந்தது. இரு வீட்டுரும் சரமாரியாக தாக்கி கொண்டனர். தடுக்க சென்ற பெண்களின் இடையில் பந்தாடப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





