ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலை என்ன..?
ஒடிசா ரயில் விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் பகுதியில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு 278 அதிகரித்துள்ளது.
11-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். 900 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மீதமுள்ளவர்களுக்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் 80 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 55 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே காவல்துறையினர் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





