ஆபத்தை உணராமல் பேருந்தில் ஏணியில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆபத்தை உணராமல் தனியார் பேருந்தின் பின்புறம் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். சங்கராபுரம் நோக்கி சென்று தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் சென்று இருக்கிறார்கள்.
அப்பொழுது இளைஞர் ஒருவர் பேருந்தின் பின்பக்கம் ஏணியில் தொங்கியபடி சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார். இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





