--- --:--:-- --

பிளஸ் டூ மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!

8

12ம் வகுப்பு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வு முடிந்து முடிவு கடந்த 8ம் தேதி வெளியானது.

 

இதில் தமிழகம் முழுவதும் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பொது தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு 250 எனவும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் 350 கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon