--- --:--:-- --

தப்பிப்பதற்காக 3வது மாடியில் இருந்து கீழே குதித்த திருடன்.. மரக்கிளை முறிந்ததால் நேர்ந்த கொடுமை..!

1

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் திருடச் சென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். திருவிழா அடுக்குமாடி குடியிருப்பில் திருடச் சென்ற மணிகண்டன் என்பவர் ஒரு வீட்டில் திருடும்பொழுது அதன் வீட்டின் உரிமையாளரிடம் கையும் களவுமாக சிக்கினார்.

 

அவரிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து அருகில் இருந்த மரத்திற்கு தாவ முயன்ற பொழுது மரக்கிளை முறிந்து கீழே விழுந்து காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon