தீட்சிதர்கள் குழந்தைகள் திருமண விவகாரம் – வெளியான சர்ச்சைக்குரிய புகைப்படம்
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இதுவரை ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் அண்மையில் தமிழக ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது குழந்தை திருமணம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





