--- --:--:-- --

கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

6

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கணேசன் என்பவரின் முதல் மனைவி சத்யாவின் மகள் மேகலா மற்றும் இரண்டாவது மனைவியின் மகன் பிரியன் ஆகியோர் இடையே நேற்று டிவி பார்ப்பதில் தகராறு எழுதுவதாக கூறப்படுகிறது.

 

அப்போது அங்கு வந்த கணேசன் இருவரையும் திட்டி விட்டு கோபத்தில் ரிமோட்டை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேகலா வீட்டிலிருந்து கிணற்றில் குதித்துள்ளார்.

 

மகளை காப்பாற்ற கணேஸ்வரன் கிணற்றில் குதிக்கவே அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.

 

Right Menu Icon