பெங்களூருவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
பெங்களூருவில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. கோடையின் தாக்கத்தை தணிக்கும் விதமாக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
விண்ணிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளை பொதுமக்கள் வியந்து ரசித்தனர் .ஆலங்கட்டிகளை சேகரித்தும் மகிழ்ந்தனர்.






