சிறுமியின் கண்ணில் இருந்து வெளிவரும் அரிசி, காகிதம், இரும்பு துகள்கள்..!
தெலுங்கானா மாநிலம் மகாபூபா மாவட்டம் கிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்து சிறுமி கண்ணிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பேப்பர், பிளாஸ்டிக் துண்டுகள், இரும்பு துகள்கள் ஆகியவை வெளிவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் வைத்திருக்கிறது.
அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். சிறுமியின் கண்ணில் இருந்து கடந்த சில நாட்களாக அரிசி, பிளாஸ்டிக் துண்டுகள், பேப்பர், இரும்பு துகள்களாகியவை தொடர்ந்து வெளி வருகின்றனர்.
தினமும் இது போல் நடைபெறுவதால் பெற்றோர் சிகிச்சைக்காக மகளை கம்மம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.





