--- --:--:-- --

கணவன் மீதுள்ள அதீத பாசத்தால் நெற்றியில் பச்சை குத்திய மனைவி..!

6

ர்நாடகாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவர் மீதான அதீத காதலை வெளிப்படுத்த வினோத முறையில் நெற்றியில் பச்சை குத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் தனது கணவர் மீதான அதிக காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வினோத செயலை செய்திருக்கிறார்.

 

இளம்பெண் சதீஷ் என்ற தனது கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்தி கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

 

இதனை 2.68 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய இளம் பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon