--- --:--:-- --

திருப்பதி கோயிலில் அலைமோதும் மக்கள்.. 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம்..!

1

வார இறுதி நாள் என்பதால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 24 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோடை விடுமுறை மற்றும் வார இறுதி என்பதால் திருமலை, திருப்பதியில் வழக்கம் தவிர அளவுக்கு அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

 

இதனால் தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. இலவச தரிசன வரிசையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

சனிக்கிழமை மட்டும் சுமார் 85 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதாகவும் உண்டியல் காணிக்கையாக மூன்று கோடியே 71 லட்சம் ரூபாய் வசூல் ஆகி இருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் துரித தரிசனத்திற்காக வழக்கமான சேவைகள் விரிவாக்கம் முடிக்கப்படுகின்றன.

 

பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனத்தை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20,000 மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

 

இதற்கிடையே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon