--- --:--:-- --

வேலூரில் கடுமையான வெயில் பைக்கில் சென்றவர் திடீரென உயிரிழப்பு..!

8

வேலூர் அருகே வெயில் தாக்கத்தால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் இருந்து 15 டிகிரி அளவில் கடுமையான வெயில் பதிவாகியுள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி இருந்தது.

 

இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து தகவல் அளித்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon