மதுரையில் பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிப்பு..!
பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை. திருவாரூர் அருகே உள்ள இடையபட்டி கிராமத்தில் கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி குழுவினர் அந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அந்த கல்வெட்டு மாணவர்களின் குலசேகர பாண்டியனின் 43 ஆம் ஆண்டு ஆட்சி கால கல்வெட்டு என தெரியவந்தது. பிற்கால பாண்டிய மன்னராக இருந்த குலசேகர பாண்டியன் ஆட்சி காலம் குறித்த தகவல்களுடன் இந்த கல்வெட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கல்வெட்டு 1311 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டதாகவும் முழு கல்வெட்டில் பாதி மட்டுமே இங்கு இருப்பதாகவும் தெரிவித்தனர்.






