“தொலைச்சு கட்டிப்புடுவேன்..!” சகோதரி ஆபரேஷனுக்கு லீவ் கேட்ட மின்வாரிய ஊழியர்… ஒருமையில் பேசி மிரட்டிய மனசாட்சியில்லாத ஜே.இ..!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இளமின் பொறியாளர், ஊழியரை மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது சகோதரியின் ஆபரேஷனுக்கு விடுமுறை கேட்டவரை ஒருமையில் பேசி மிரட்டிய இளமின் பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது, தொப்பம்பாளையம் துணை மின் நிலையம். இங்கு இளமின் பொறியாளராக தீபக் என்பவர் பணியாற்றி வருகிறார். அண்மையில்தான் இவர், பவானியில் இருந்து தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு இடமாறுதலாகி பணியில் சேர்ந்துள்ளார். இவர் அதிகார தோரணையில் தனக்கு கீழுள்ள ஊழியர்களை அதட்டி மிரட்டி எடுபிடிபோல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் ஒரு சம்பவம் அண்மையில் அரங்கேறியுள்ளது. அதாவது, தொப்பம்பாளையம் துணை மின் நிலைய அலுவலகத்தில் பணிபுரியும் ஹரிராஜ் என்ற மின்வாரிய ஊழியர், தனக்கு இரண்டு நாட்கள் விடுமுறை தேவைப்படுவதாக, இளமின் பொறியாளர் தீபக்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுவும் தனது அக்காவின் ஆபரேஷனுக்கு விடுமுறை வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே 3 நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டதால், இனி விடுப்பு கேட்கக்கூடாது என்று கூறி, இளமின் பொறியாளர் தீபக் விடுமுறை அளிக்க மறுத்ததுடன் ஹரிராஜை ஒருமையில் பேசி மிரட்டியும் உள்ளார்.
மேலும், தன்னை அட்ஜஸ்ட் செய்து வேலை செய்தால் மட்டுமே மின் வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்க முடியும்; `என்னை அட்ஜெட்ஸ் இல்லாவிட்டால், உன்னை தொலைத்து விடுவேன்’ என்று ஃபோனில் பேசியபோது மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, மின் வாரிய பொறியாளர் தீபக்கின் இந்த அடாவடி மிரட்டல் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தனது சகோதரியின் ஆபரேஷனுக்கு விடுப்பு கேட்டதற்கு இப்படியா ஒருமையில் பேசி அசிங்கப்படுத்துவது? கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு மின் வாரியப் பொறியாளர் நடந்து கொண்டிருக்கக் கூடாதா என்றெல்லாம் குமுறல்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பொறியாளர் தீபக் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மின் வாரிய ஊழியர்களே கோரிக்கை விடுத்துள்ளனர்.
“என்ன அட்ஜெஸ்ட் செஞ்சாத்தான் வேலை!”
ஆடியோவில் ஜே.இ. பேசியது என்ன?
மின்வாரிய ஊழியர் ஹரிராஜ், ஜே.இ. தீபக் இருவரும் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இருவரும் பேசும் அந்த ஆடியோவில், ஹரிராஜை ஒருமையில் பேசும் தீபக், தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, தொலைச்சுபுடுவேன் என்று அடிக்கடி மிரட்டுவதும் பதிவாகி உள்ளது. இருவரும் பேசும் உரையாடல் வருமாறு:
ஊழியர் ஹரிராஜ்: சார், 3 நாள் ஷிப் பார்த்திருக்கேன். நீங்க எப்ப லீவு கொடுத்தாலும் எடுத்துக்கறேன் சார்…
ஜே.இ தீபக் : லீவெல்லாம் தர முடியாது. பார்த்துக்கலாம். தேவைப்படும்போது நான் எப்ப வேணா கொடுப்பேன். என்னிக்கும் ஏ.இ.யை அனுசரிச்சு போனீன்னா ஓட்டிக்கலாம். இல்லைன்னா வெச்சுக்க, தொலைச்சு கட்டிப்புடுவேன். தெரிஞ்ச்சுக்க ஹரிராஜ். நான் வந்து பார்த்தா, அமைதியா போயிட்டிருக்கேன்னு நினைச்சுக்காத. ஒழுக்கமா சொல்ற வேலைய பார்த்துக்கு போயிட்டு இரு. அங்க போறது, இங்க போறதுன்னு வெச்சுக்கிட்ட தொலைச்சு கட்டிப்புடுவேன்.
ஊழியர்: நான் ஒழுக்கமாத்தான் வேலை செஞ்சுட்டு இருக்கேன் சார்…
ஜே.இ : ஏய், வைடா ஃபோன. என்ன பேசிக்கிட்டு இருக்க. போன தடவை எத்தன நாளு லீவுல போயிட்டு வந்திருக்க?
ஊழியர்: என்னை ஷிப்டுக்கே அனுப்பாதிங்க சார்… O & M க்கே வெச்சுக்கோங்க சார்.
ஜே.இ : உன்ன எவண்டா வெச்சிருக்கான். இருடா ஆர்டன் போட்டு உன்ன தொலைச்சுக் கட்றேண்டா. உனக்கு வெச்சுகிறேன் இரு. ஓவர் மயிறு பண்ணீட்டு இருக்கியா? என்ன கிறுக்கன்னு நினைச்சுட்டு இருக்கியா?
ஊழியர்: சார் என்ன பவர் ஹவுஸ் அனுப்பாதிங்க சார். O & M-ல என்ன வேலை கொடுக்கறீங்களோ கொடுங்க சார்…
ஜே.இ : ஏய்… நான் சொல்ற வேலைய நீ கேக்கற… நீ சொல்றத நான் கேக்க முடியாது.
ஊழியர்: சார், உங்க பேச்ச நான் மீறினதே கிடையாது.
ஜே.இ : ஏய், ஒழுக்கமா நாளைக்கு 8 மணிக்கு டூட்டிக்கு இருக்கற. ஒரு நிமிசம் லேட்டாச்சுன்னா முடிஞ்ச நீ. ஓவர் மயிறு பண்ணீட்டு இருக்க. தொலைச்சுகட்டிப்புடுவேன் தெரிஞ்சுக்க. ஒழுக்கமா வந்து சொல்ற வேலைய செஞ்சுட்டு கப்புசிப்புன்னு போயிட்டு இருக்கற. யார்கிட்டையாவது வாய் பேசின, முடிச்சுக்கட்டீடுவேன். வாயை மூடீட்டு அப்படியோ ஒக்கார்ற… யார்கிட்டையாவது ஃபோனை போடறது, மயிற போடறத வெச்சுகிட்ட தொலைச்சுப்புடுவேன். இப்பதான 3 நாள் லீவு போட்டு போன…
ஊழியர்: சார், எமர்ஜென்சி சார். அக்காவுக்கு ஆபரேஷன்னுதான் லீவு கேக்கறேன்.
ஜே.இ : அதெல்லாம் முடியாது. நான்கூட லீவு கொடுக்கலாம்னுதான் இருந்தேன். லீவு கேன்சல். நீ டூட்டிக்கு வந்திடு. லீவெல்லாம் ஏ.இ. கிட்ட பேசிக்க. லீவுக்கெல்லாம் என்கிட்ட கூப்பிடாத. நான் கொடுத்த லீவு கேன்சல். இன்னிக்கே டூட்டிக்கு வந்துடு.
ஊழியர்: சார், அப்ப ஷிப்டு பார்த்ததுக்கு எப்பங்க சார் லீவு எடுத்துக்கிட்டும்?
ஜே.இ: உங்க ஏ.இ.கிட்ட பேசிட்டு உனக்கு என்னைக்கு லீவு வேணுமோ முன்னாடியே சொல்லீட்டு எடுத்துக்கோ நீ
– இவ்வாறு இருவரது உரையாடல் தொடர்ந்தது.






