தொப்பியை கழட்டி விடுவேன் என காவல் நிலையத்தில் நுழைந்து காவலரை திமுக நிர்வாகி மிரட்டியதாக தகவல்..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரை திமுக நிர்வாகி ஒருவரும் விரும்பியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆறாம் தேதி காவல் நிலையத்தில் இரண்டு சிறாரிடம் ஆய்வாளர் செல்வம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த பொழுது தனது ஆதரவாருடன் சென்று திமுக செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என அதிகார தோணியில் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து ஆய்வாளருக்கும், திமுக நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை எடுத்து தொப்பியை கழட்டி விடுவேன் ஜாக்கிரதை என ஆய்வாளரை மிரட்டியதாக தெரிகிறது. இது தொடர்பான காணொளி வெளியாகி இருந்தாலும் காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.






