--- --:--:-- --

4 சென்டிமீட்டர் அளவுக்கு கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. ரத்த வெள்ளத்தில் இளைஞர்..!

6

சென்னையில் காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கே கே நகரை சேர்ந்த செரியன் என்பவர் சம்பவத்தன்று பணி முடிந்து தனது தோழியுடன் அண்ணாசாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

 

விஜய் ராகவா சாலையில் திரும்பிய பொழுது செரியன் கழுத்தை நூல் சுற்றிய நிலையில் நிலைத்தடுமாறி, அவரும், அவரது தோழியும் கீழே விழுந்து காயமுற்றனர். இளைஞரின் கழுத்தை சுமார் நான்கு சென்டிமீட்டர் அளவுக்கு மாஞ்சா நூல் அறுத்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

கடந்த 45 நாட்களில் சென்னையில் இது மூன்றாவது மாஞ்சா நூல் விபத்தாகும். பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon