மது போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது..!
நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் மது போதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இந்தியப் பயணி விமானத்தில் போதையில் சக பயணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பொழுது அவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த ஒழுங்கீனமான செயல் குறித்து விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் விமானம் தரையிறங்கிய பிறகு சம்பந்தப்பட்ட நபரை தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





