--- --:--:-- --

பள்ளிக்கு சென்று மாயமான சிறுமி சடலமாக மீட்பு..!

7

உதகை அருகே பழங்குடியின கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர். நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

பள்ளி உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வந்த பொழுது வழக்கமாக வீட்டிற்கு செல்லும் சாலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் பலத்த காயங்களுடன் மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாகவும் உடற்கூறாய்வு முடிந்த பின்னரே முழு விவரங்கள் தெரிய வரவும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சக மாணவிகளிடம் விசாரித்ததில் மாணவி பள்ளியிலிருந்து திரும்பும் பொழுது உறவினரான ராஜேஷ் என்பவருடன் காரில் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த காரை கைப்பற்றியுள்ள போலீசார் தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon