உறை கிணற்றில் விழுந்து தத்தளித்த குட்டி யானை..!
கேரளாவில் கிணற்றில் விழுந்த குட்டியானை பத்திரமாக மீட்கப்பட்டது. மலப்புரத்தில் ரப்பர் தோட்டத்தில் மத்தியில் அமைந்துள்ள உறை கிணற்றில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்து தவித்தது. வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு வனத்துறையினர் வந்தனர்.
கிரேன் பொக்லைன் மூலம் உறைக்கிணறை உடைத்த வனத்துறையினர் குட்டி யானை வெளியேற வழி ஏற்படுத்தினர். அதுவரை உறை கிணற்றிலேயே தத்தளித்த குட்டி யானை ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





