பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை துரத்திய போலீசார்..!
சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் துரத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. அண்ணாசாலை மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட போவதாக வந்த தகவலையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சிலர் விலை உயர்ந்த வாகனங்களில் அதிவேகமாக பொது மக்களுக்கு இடையூறு செய்தபடி வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்ட பொழுது சிலர் தப்பிக்க முயற்சித்தனர். இந்த நிலையில் போலீசார் சாலையில் ஓடியபடி அவர்களை துரத்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஆலந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று இளைஞர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





