அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் – மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
திரிணாமுல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடும் எனக் கூறிய அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். கடந்த 14ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு வந்திருந்த அமித்ஷா பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.
அப்பொழுது மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றி இருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடும் என பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் சதி செய்து ஆட்சியை கலைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலங்கிவிடும் எனக் கூறி கவிழ்ந்து விடும் எனக் கூறிய அமைச்சர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





