--- --:--:-- --

தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை..!

4

மிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

வரும் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

 

வெப்பநிலையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon