மேம்பாலத்தில் செல்பி எடுக்க காவல்துறை தடை..!
மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் செல்பி எடுக்க மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக மதுரை நத்தம் சாலையில் சுமார் 7.30 கிலோ மீட்டர் அளவுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி திறந்து வைத்தார்.
மேம்பாலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு 24 மணி நேரமும் உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து காவலர்களுடன் கூடிய ரோந்து வாகனமும் ரோந்து பணியில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் வாகனத்தை நிறுத்துவது, பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது பாலத்தில் வாகனங்கள் சாகசம் செய்வது, சுவற்றில் அமர்வது போன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.





