பேனா சிலை – மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று இறுதி முடிவு..!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமையும் விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று இறுதி முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் 290 மீட்டர் தொலைவில் 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.
சுமார் 8,550 சதுர பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பேனா நினைவு சின்னத்திற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சமர்ப்பித்தது.
அதில் பேனா நினைவுச் சின்னம் அமைந்தால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்த விபரங்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.





