சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு..!
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 200 ரூபாய் அதிகரித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கப்படும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் இன் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 1,068 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு விலை தற்போது 1,118 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் பிரதமரின் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்ட வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





