அறுந்து விழுந்த மின் கம்பி..திடீர் பிரேக் அடித்ததால் விபரீதம்..!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, வழியில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த மின்கம்பியை பார்த்து திடீரென பிரேக் பிடித்த போது நிலை தடுமாறு அறுந்து கிடந்த கம்பியின் மீது விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்த கோதண்டம் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது 10 வயது மகனை ஹேமநாதன் அழைத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வயல் பாதை வழியாக சென்று கொண்டிருந்த பொழுது வழியில் உயர்மின் அழுத்த கம்மி ஒன்று அறுந்து கிடந்ததை பார்த்து வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி விழுந்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





