--- --:--:-- --

ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதை செய்யக்கூடாது..!

5

ப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன் புதிய கல்வி ஆண்டு வகுப்புகளை தொடங்கக்கூடாது என சிபிஎஸ்சி செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.

 

குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்தி முடிக்கும் நோக்கத்தில் சில பள்ளிகள் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கிவிட்டதாக அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

இத்தகைய காலத்தில் மாணவர்களுக்கு சுமை மற்றும் மனச்சுமையை உருவாக்கும் எனவும் மேலும் வாழ்க்கை திறன், நாடக கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட முடியாது நிலையில் உள்ளது என அனுராக் தெரிவித்துள்ளார்.

 

எனவே வகுப்புகளை ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 31க்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon