மனைவி பிரிந்த துக்கத்தில் கத்தி, துப்பாக்கியுடன் தற்கொலைக்கு முயன்ற கணவன்..!
டெல்லியில் கத்தி துப்பாக்கியுடன் பொதுவெளியில் ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டியன் சந்வால் என்பவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை பிடித்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்தனர்.





