3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்த சிறுவன்..ரிப்போர்ட்டில் அதிர்ச்சி..!
சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளான். அதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் இருந்த அதிர்ச்சியான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவர்கள் சிறுவனை எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தி பார்த்த பொழுது சிறுவனின் இடது நுரையீரலில் ஸ்பிரிங் போன்ற உலோக பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.
நுரையீரலில் ஸ்ப்ரிங் சிக்கி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர் மருத்துவர்கள். ஸ்ப்ரிங் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நுரையீரல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.






