மெசேஜ் ஆக வந்த லிங்கை கிளிக் செய்ததால் நடிகை நக்மாவுக்கு ஏற்பட்ட இழப்பு..!
சைபர் கிரைம் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் பட்டியலில் நடிகை நக்மாவும் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் காதலன், சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை நக்மா தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியில் உள்ளார்.
இந்த நிலையில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது அந்த நபர் வங்கி கணக்கின் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என கூறிய நிலையில் நக்மாவுக்கு தொடர்ச்சியாக ஓடிபிகள் வந்துள்ளன.
சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வேறொரு கணக்கிற்கு இன்டர்நெட் பேங்கிங்கில் மாற்றப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். எந்த ஒரு தகவல்களையும் அளிக்காத போதிலும் பணம் திருடப்பட்டது எப்படி எனவும் அவர் குழப்பம் அடைந்துள்ளார்.
கடந்த சில நாட்களில் 80 பேரிடம் இது போல் பணம் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மலையாள நடிகை ஸ்வேதா மேனனும் இதே போல் பணத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





