--- --:--:-- --

மணீஷ் சிசோடியா சிறையில் செல்போன் பயன்படுத்துகிறாரா..?

2

ரண்டு நாட்களாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். டெல்லியில் மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

 

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகளும் மணீஷ் சிசோடியாவிடம் திகார் சிறையில் தனி அறையில் செவ்வாய் அன்று விசாரணை நடத்தினர். ஹோலி விடுமுறைக்கு பிறகு மீண்டும் இன்று இரவு இரண்டாவது நாளாக விசாரணையை தொடர்ந்தனர்.

 

விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். சிசோடியாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிற்கு சிறையில் செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

 

டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தாலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகள் பதிவேற்றப்படுகிறது.

 

இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ள பாஜக, மணீஷ் சிசோடியா சிறையில் இருந்தபடியே எப்படி செல்போன் பயன்படுத்துகிறார் என வினவப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon