--- --:--:-- --

வலையங்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ஒன்றிய கவுன்சிலர்..!

1.2

தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.பாரத பிரதமர் மோடியின் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி அழகுமலை ஏற்பாட்டின் படி கிளை கழக நிர்வாகிகளுடன் பள்ளி மாணவ மாணவிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலத்துடனும் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் எனவும் வழிபட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon