வடமாநிலத்தவர் குறித்து வெளியிட்ட 2 வீடியோக்களும் உண்மை இல்லை..!
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில் அந்த தகவலை டிஜிபி சைலேந்திரபாபு ]வெளியிட்டுள்ளார்.
அது தவறான தகவல் என கூறியுள்ள அவர் இது போன்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





