52 நாட்களுக்கு ஒரே நேரத்தில் கையெழுத்து..வேலையே செய்யாமல் சம்பளம்..!
திருவள்ளூர் மாவட்டம் பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் வருகை பதிவேட்டில் ஒரே நாளில் 52 நாட்களுக்கான கையெழுத்தை போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேரூராட்சி தலைவராக இருக்கும் ஹரிச்சந்திரனுக்கும் செயல் அலுவலர் பிரகாசுக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக தெரிகிறது.
செயலாளரும் முறையாக கணக்கு சமர்ப்பிக்கும் வரை அலுவலகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சி உதவி இயக்குனருக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அன்று முதல் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்திருக்கிறார்.
வேலைக்கு செல்லாமல் சம்பளம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அலுவலகத்திற்கு சென்ற பிரகாஷ் வருகை பதிவேட்டில் 52 நாட்களுக்கான கையெழுத்தை ஒரே நேரத்தில் போட்டுவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





