--- --:--:-- --

பன்றியிடம் போராடி மகளை காப்பாற்ற உயிரை கொடுத்த தாய்..!

3

த்தீஸ்கர் மாநிலத்தில் 17 வயது மகளை காப்பாற்ற காட்டு பன்றியுடன் சண்டையிட்டு தனது உயிரை இழந்த தாயின் செயல் நெஞ்சை உலுக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த துளசி அவரது மகளை அழைத்துக்கொண்டு கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு விவசாய வேலைக்காக சென்றுள்ளார்.

 

அப்பொழுது தோட்டத்தில் மறைந்திருந்த காட்டுப்பன்றி அங்கு அமர்ந்திருந்த குழந்தையை நோக்கி ஓடிவந்தது. இதனை கண்ட துளசி வேகமாக சென்று தனது மகளை காட்டு பன்றியிடமிருந்து காப்பாற்றும் முற்பட்டார். அப்பொழுது துளசியை காட்டுப்பன்றி கொடூரமாக தாக்கியது.

 

காட்டுப்பன்றி தன்னை தாக்கிய பொழுதும் தன் மகளை அவர் காட்டுப்பன்றியிடம் இருந்து தப்பி ஓடிவிடும் படி கூற அவர் அங்கிருந்து ஓடி சென்று கிராமத்தினரிடமும் வனத்துறையினரிடமும் தெரிவித்தார். இதையடுத்து அந்த தோட்டத்திற்கு கிராமத்தினரும், வனத்துறையினரும் விரைந்து வந்தனர்.

 

ஆனால் காட்டுப்பன்றி தாக்கியதில் முகம் உள்ளிட்ட உடல் பாகங்களில் படுகாயம் அடைந்த துளசியா உயிர் இழந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் துளசியாவின் உடலை இன்று பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon