--- --:--:-- --

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது..!

1

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு கண்ட பதவிகள் மற்றும் குரூப் 2ஏ பிரிவு நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் என்று மொத்தம் 5,446 பணியிடங்கள் நரகப்பட உள்ளன.

 

இந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 9 லட்சத்தை 94 ஆயிரத்து 890 பேர் எழுதிய முதல் நிலை தேர்வில் சுமார் 55 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சென்னையில் 32 தேர்வு மையங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களிலும் காலை, மாலை என இரு வேலைகளும் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும். தேர்வுக்கு 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வறைக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon