--- --:--:-- --

நியூசிலாந்தை புரட்டி போட்ட புயல்..!

5

நியூசிலாந்தை தாக்கிய புயலில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மாகாணங்களில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

 

ஐந்து மாகாணங்களை பந்தாடிய இந்த புயல் கரையை கடந்த பொழுது பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில் மக்கள் வீட்டின் மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இதற்கிடையே புயலில் சிக்கி உயரிழந்தவர் எண்ணிக்கை உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பத்தாயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon